அதிமுக வேட்பாளர் செங்கோட்டையன் கோபிசெட்டிப்பாளையம் தொகுதியில் வெற்றி பெற்றார்.
மதுரை மேற்கு தொகுதியில் செல்லூர் ராஜூம், வேதாரண்யம் தொகுதி வேட்பாளர் ஓ.எஸ்.மணியன் ஆகியோர் வெற்றி பெற்றுளளனர்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட செங்கோட்டையன், 28 ஆயிரத்து 477 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடினார்.
அதிமுக வேட்பாளர் செங்கோட்டையன் 1 லட்சத்து 7 ஆயிரத்து 999 வாக்குகளும், திமுக வேட்பாளர் மணிமாறன் 79 ஆயிரத்து 522 வாக்குகளும் பெற்றனர்.
மதுரை மேற்கு தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் செல்லூர் ராஜூ, தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் சின்னம்மாளை விட பத்தாயிரத்து 16 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார்.
அதிமுக வேட்பாளர் செல்லூர் ராஜூ 82 ஆயிரத்து 971 வாக்குகளையும், திமுக வேட்பாளர் சின்னம்மாள் 72 ஆயிரத்து 955 வாக்குகளையும் பெற்றனர்.
நாகை வேதாரண்யம் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஓ.எஸ்.மணியன், தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் எஸ்.கே.வேதரத்தினத்தை விட 12 ஆயிரத்து 327 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார்.
அதிமுக வேட்பாளர் ஓ.எஸ்.மணியன் 78 ஆயிரத்து 717 வாக்குகளையும், திமுக வேட்பாளர் வேதரத்தினம் 66 ஆயிரத்து 390 வாக்குகளையும் பெற்றனர்.
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தொகுதி அதிமுக வேட்பாளர் வைத்திலிங்கம் 89 ஆயிரத்து 405 வாக்குள் பெற்று வெற்றி பெற்றார்.
திமுக வேட்பாளர் ராமச்சந்திரனை காட்டிலும் 29 ஆயிரத்து 409 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார்.
அதிமுக வேட்பாளர் வைத்திலிங்கம் 89 ஆயிரத்து 405 வாக்குகளையும், திமுக வேட்பாளர் ராமச்சந்திரன் 60 ஆயிரத்து 356 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
ஈரோடு மாவட்டம் பவானி தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் கே.சி.கருப்பணன் மூன்றாவது முறையாக வெற்றி பெற்றுள்ளார்.
தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் துரைராஜை விட 23 ஆயிரத்து 206 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார்.
அதிமுக வேட்பாளர் கருப்பணன் 1 லட்சத்து 285 வாக்குகளையும், திமுக வேட்பாளர் துரைராஜ் 77 ஆயிரத்து 79 வாக்குகளையும் பெற்றனர்.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஆர். காமராஜ், திமுக வேட்பாளர் எஸ்.ஜோதிராமனை 4 ஆயிரத்து 424 வாக்குகள் வித்தியாசத்தில் விழ்த்தி வெற்றி பெற்றார்.
அதிமுக வேட்பாளர் ஆர்.காமராஜ் 1 லட்சத்து 3 ஆயிரத்து 637 வாக்குகளையும், திமுக வேட்பாளர் ஜோதிராமன் 99 ஆயிரத்து 213 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.