ஸ்டெர்லைட் விவகாரம் தொடர்பான வழக்குகளை உச்ச நீதிமன்ற நீதிபதி ரோஹிங்டன் நாரிமன், நவீன் சின்ஹா அமர்வு விசாரித்து வந்தநிலையில், தற்போது இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிட முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். ஸ்டெர்லைட் தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அரசாணை செல்லும் என்று தெரிவித்துள்ள நீதிபதிகள், தமிழக அரசின் அரசாணைக்கு எதிராக தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட முடியாது என்றும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கூடாது என்ற உச்ச நீதிமன்றத்தின் அறிவிப்பு தமிழக அரசுக்கு கிடைத்த வெற்றி என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.