அமைதியான முறையில் நடைபெற்று முடிந்தது வேலூர் மக்களவை தேர்தல்

வேலூர் தொகுதியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்று முடிந்தது.

திமுகவினரின் பணப்பட்டுவாடாவால் வேலூர் தொகுதிக்கு மட்டும் மக்களவை தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில், தேர்தல் ஆணையம் இன்று வேலூரில் மக்களவை தேர்தலை நடத்த முடிவு செய்தது. அதன் படி, இன்று காலை தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்துள்ளது. காலை மந்தமாக தொடங்கிய வாக்குப்பதிவு மாலையில் விறுவிறுப்படைந்தது. அசம்பாவித சம்பவங்கள் எதுவுமின்றி வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்றது. வாக்குப்பதிவு நிறைவு பெற்றதை தொடர்ந்து, இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் பலத்த பாதுகாப்போடு, வாக்கு எண்ணும் மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. பதிவான வாக்குகள் அனைத்தும் வருகிற 9ஆம் தேதி வெள்ளிக்கிழமை எண்ணப்படுகின்றன.

Exit mobile version