வேலூர் மக்களவை தொகுதிக்கு தேர்தல் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வேலூர் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வீடு மற்றும் குடோனில் கட்டுக் கட்டாக பணம் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து அத்தொகுதியில் தேர்தலை ரத்து செய்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார். தேர்தல் ரத்தை எதிர்த்து புதிய நீதிக் கட்சி வேட்பாளர் ஏ.சி சண்முகம் மற்றும் சுயேட்சை வேட்பாளர் சுகுமாறன் ஆகியோர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். பணப்பட்டுவாடாவிற்காக தேர்தலை நிறுத்தக் கூடாது என்று குறிப்பிட்ட அவர்கள் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்ட எதிர்தரப்பை தகுதி நீக்கம் செய்யலாம் என்றும் வாதிட்டனர். எனினும் தேர்தல் ஆணைய முடிவுகளில் தலையிட முடியாது என்று கூறிய உயர்நீதிமன்றம், வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.