மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா நிலையம் அரசுடமை – அரசிதழில் வெளியிட்டது தமிழக அரசு

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா நிலையம் அரசுடமையாக்கப்பட்டது குறித்து, தமிழக அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது. சென்னை போயஸ் கார்டன் பகுதியில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வசித்து வந்த வேதா நிலையம் உள்ளது. இதை அவரது நினைவில்லமாக மாற்ற 2017ம் ஆண்டு தமிழக அரசு முடிவு செய்தது. ஜெயலலிதா இல்லத்தை நினைவில்லமாக மாற்றுவதற்கு நிலம் கையகப்படுத்தும் சட்டவிதிகளின் படி, 67 கோடியே 90 லட்ச ரூபாயை இழப்பீட்டு தொகையாக தமிழக அரசு நிர்ணயித்தது. இந்நிலையில், வேதா நிலையம் அரசுடமையாக்கப்பட்டதாக அண்மையில் தமிழக அரசு அறிவித்த நிலையில், தற்போது அதை அரசிதழில் வெளியிட்டுள்ளது. ஜெயலலிதா நினைவிடத்தை நிர்வகிக்கும் அறக்கட்டளைக்கு முதலமைச்சர் தலைவராக இருப்பார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Exit mobile version