ஓமனை நோக்கி திசை மாறிய "வாயு புயல்"

அதிதீவிர புயலாக மாறியுள்ள வாயு ஓமனை நோக்கி திசை மாறியுள்ளதால், குஜராத் மாநிலம் புயல் பாதிப்பிலிருந்து தப்பியுள்ளது

குஜராத்தின் போர்பந்தர்-டையூ இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வாயு புயல் கடற்கரை வழியே நகர்ந்து ஓமனை நோக்கிச் செல்கிறது. இதனால் புயலினால் குஜராத் மாநிலத்திற்கு பாதிப்புகள் இல்லையென அகமதாபாத் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனினும் புயலின் வெளிவட்டப் பகுதி குஜராத்தைக் கடந்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கிர் சோம்நாத், ஜுனகாத், துவாரகா உள்ளிட்ட மாவட்டங்களில் 110 கிலோ மீட்டர் வரை காற்றின் வேகம் இருக்கும். இந்நிலையில் குஜராத் மாநிலத்திற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை அடுத்த 48 மணி நேரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தளர்த்த வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. புயல் எச்சரிக்கை காரணமாக குஜராத்தில் 500 கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதுடன், குறிப்பிட்ட இடங்களில் ரயில் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Exit mobile version