தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு 80 சதவீதம் குறைந்திருப்பதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் பவானி நகர நீர்நிலை புறம்போக்கு நிலத்தில் குடியிருப்போருக்கு மயிலம்பாடி கிராமத்தில் மாற்று வீடுகள் கட்டிக்கொடுக்கும் திட்டத்தின் கீழ் 45 கோடி ரூபாய் செலவில் 499 வீடுகள் கட்ட பூமி பூஜை நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கருப்பணன், தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு 80 சதவீதம் குறைந்திருப்பதாக கூறினார்.
அதேசமயம் மீதமிருக்கும் 20 சதவீத பிளாஸ்டிக் பயன்பாட்டை கட்டுப்படுத்தப்படுத்தவும், உள்ளாட்சி அமைப்பு அதிகாரிகளுக்கு தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.