தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
புல்வாமாவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் படை வீரர்கள் 40 பேர் வீரமரணமடைந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று பாகிஸ்தான் எல்லைக்கோட்டு பகுதியை தாண்டிய இந்திய விமானப்படை நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில் தீவிரவாத பயிற்சி முகாம்கள் அழிக்கப்பட்டன.
இதில், 300க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக இந்திய வெளியுறவுத்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன. இந்தநிலையில், தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தநிலையில், பயங்கரவாதிகளை ஒடுக்க தேவையான நடவடிக்கையை பாகிஸ்தான் மேற்கொள்ளவேண்டும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ வலியுறுத்தி உள்ளார். பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் குரோஷியிடம் பேசிய அவர், தீவிரவாதத்துக்கு எதிராக உறுதியான நடவடிக்கை அவசியம் என்றும் பேச்சுவார்த்தை மூலம் ராணுவ நடவடிக்கையை தவிர்க்க இருநாடுகளும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.