கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான, அமெரிக்க ஓபன் டென்னில் தொடர் இன்று கோலாகலமாக தொடங்குகிறது.
நடப்பு ஆண்டின் இறுதி கிராண்டஸ்லாம் போட்டியாக நடைபெறும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில், பெடரர், நடால் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் காயம் காரணமாக விலகியுள்ளனர். உலகின் முதல் நிலை வீரரான செர்பியாவின் ஜோகோவிச், ரஷ்யாவின் மெட்வதேவ், ஜெர்மனியின் அலெக்சாண்டர் சுவரேவ் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இந்த தொடரில் பங்கேற்கின்றனர். இந்த ஆண்டில், இதுவரை 3 கிராண்டஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள ஜோகோவிச், அமெரிக்க ஓபன் பட்டத்தையும் வென்றால் ஒரே ஆண்டில் நான்கு கிராண்டஸ்லாம் பட்டங்களை வென்ற ஒரே என்ற பெருமையை பெறுவார். அதே போல், 21 கிராண்டஸ்லாம் பட்டங்களை வென்ற முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையும் ஜோகோவிச் படைப்பார். கடந்தாண்டு, லைன் நடுவர் மீது பந்தால் தாக்கியதால் ஜோகோவிச் தகுதி நீக்கம் செய்யப்பட்டார் குறிப்பிடத்தக்கது. பெண்கள் ஒற்றையர் பிரிவில் வில்லியம்ஸ் சகோதரிகள் காயம் காரணமாக விலகியுள்ள நிலையில், ஆஸ்திரேலியாவின் ஆஸ்லே பார்டி, ரஷ்யாவின் சபலென்கா, ஜப்பானின் ஒசாகா ஆகியோர் பங்கேற்கின்றனர்.