மசூத் அசார் உள்ளிட்ட 4 பேரை பயங்கரவாதிகளாக மத்தியரசு அறிவித்ததற்கு அமெரிக்கா ஆதரவு

புதிய சட்டப்படி மசூத் அசார் உள்ளிட்ட 4 பேரை பயங்கரவாதிகளாக அறிவித்ததற்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது.

இந்தியாவின் சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின்படி ஒரு இயக்கத்தை மட்டுமே பயங்கரவாத இயக்கமாக அறிவிக்க முடியும் என்ற நிலை இருந்தது. அண்மையில் இந்த சட்டம் திருத்தம் செய்யப்பட்டது. அதன் மூலம் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்க தலைவர் மசூத் அசார், லஷ்கர் இ தொய்பா தலைவர் ஹபிச் சயீத், மும்ம்பை தாக்குதல் குற்றவாளி ஜாகியூர் ரகுமான் லக்வி, நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் ஆகியோரை பயங்கரவாதிகள் என மத்திய அரசு அறிவித்தது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது.

Exit mobile version