இந்தியாவுக்கு ஆதரவு… பாகிஸ்தானுக்கு நெருக்கடி தரும் அமெரிக்கா…

தீவிரவாத அமைப்பினரின் சொத்துக்கள் மற்றும் நிதியினை உடனடியாக முடக்க பாகிஸ்தான் அரசுக்கு அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது

புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் இந்தியாவின் உரிமையான நடவடிக்கைக்கு முழு ஆதரவு அளிக்கும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. தீவிரவாத தாக்குதலைத் தடுப்பதற்கு இந்தியாவிற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளதாகவும், தற்போது நடந்த இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா இரங்கல் தெரிவித்து கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளது.

எந்தவொரு நாடும் தீவிரவாதிகளுக்கு புகலிடம் அளிக்கக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பாகிஸ்தான் தனது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என்றும் ஐக்கிய நாடுகளின் தடை பட்டியலில் உள்ள அமைப்புகளுக்கான நிதி மற்றும் பொருளாதாரத்தை முடக்க வேண்டுமென தெரிவித்தார்.

Exit mobile version