ஈரானின் மிரட்டலுக்கு அமெரிக்கா அடிபணியாது-அதிபர் டிரம்ப்

ஈரானின் மிரட்டலுக்கு அமெரிக்கா அடிபணியாது என, அமெரிக்க அதிபர் டிரம்ப் உறுதிபடக் கூறியுள்ளார்.

அணுஆயுத ஒப்பந்தத்தில் விதிமுறைகளை பின்பற்ற முடியாது என ஈரான் மறுப்புத் தெரிவித்து வருகிறது. இதனால் ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்தது. இதனால் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனிடையே அண்மையில் வளைகுடா நாடுகளுக்கு அமெரிக்கா போர்க்கப்பலை அனுப்பி வைத்தது. அமெரிக்க கப்பலைத் தாக்க ஈரான் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து கருத்து தெரிவித்த அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் அமெரிக்கக் கப்பலின் மீது தாக்குதல் நடத்தினால், அத்துடன் அந்நாட்டின் சகாப்தம் அடியோடு முடிந்து விடும் என்றார். அமெரிக்காவை யாரும் மிரட்ட முடியாது என்று அவர் கூறினார்.

Exit mobile version