ஹாங்காங்கில் தீவிரமடைந்துள்ள போராட்டம் குறித்து ஐக்கிய நாடுகள் சபை விவாதிக்க உள்ளதாக தகவல் வெளியகியுள்ளது.
குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களை சீனாவுக்கு கொண்டு சென்று விசாரிக்க அனுமதிக்கும் மசோதாவை நிரந்தரமாக நீக்கக் கோரி, ஹாங்காங்கில் 3 மாதமாக லட்சக்கணக்கான பேர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அண்மையில் விமானநிலையத்துக்குள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியவர்கள் மீது காவல்துறை தாக்குதல் நடத்தியதால் கலவரம் மூண்டது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள சீனா, தீவிரவாதிகள் போல போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்துவதாக குற்றம் சாட்டியுள்ளது. இந்நிலையில் சர்வதேச சட்டவிதிகளை மீறி போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை, மிளகுப்பொடி வீச்சு நடத்தப்படுவதாகவும் கூறப்படுவதால் இது பற்றிய சீனாவின் நிலைப்பாட்டை விவாதிக்க ஐக்கிய நாடுகள் சபை திட்டமிட்டுள்ளது.