ஐநா பாதுகாப்பு கவுன்சிலில், ஜெய்ஷ் இ முகமது அமைப்பிற்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில், புல்வாமா தீவிரவாத தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. பயங்கரவாதம் ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாது என்று குறிப்பிட்டதுடன், தீவிரவாதத்திற்கு எதிராக இந்தியா மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு மற்ற நாடுகள், அனைத்து விதமான உதவிகளையும் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டது.
தொடர்ந்து, ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தை நீதியின் முன் நிறுத்த வேண்டும் என்று இந்தியா சார்பில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானம் சீனா உள்ளிட்ட நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.