தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டதை எதிர்த்து, தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கேட்டு வேதாந்தா நிறுவனமும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
ஸ்டெர்லைட் ஆலையால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டதாகவும், காற்று மாசு ஏற்பட்டதாகவும், ஆலையில் பாதுகாப்பற்ற முறையில் அமிலங்கள் இருப்பு வைக்கப்படுவதாகவும், வேதாந்தா நிறுவனம் உரிய விதிகளை பின்பற்றவில்லை தமிழக அரசு சார்பில் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் உச்சநீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் ஆலை வழக்கின் இறுதிகட்ட விசாரணை தீவிரமடைந்துள்ளது. இன்றைய விசாரணையில், தமிழக அரசின் வாதம் தொடர்ந்து நடைபெற இருக்கிறது. இதன்பின்னர், வேதாந்தா குழுமத்தின் வாதம் நடைபெறும் என தெரிகிறது.