பிரதமர் மோடியை man vs wild நிகழ்ச்சியில் ஒரு சாகச பயணத்திற்கு அழைத்து சென்றதை ’நான் பாக்கியமாக கருதுகிறேன்’ என பியர் கிரில்ஸ் கூறியுள்ளார்.
பிரதமர் மோடி அவர்கள் அனைத்து நாடுகளுக்கும் சென்று இந்தியாவின் வளர்ச்சி குறித்தும், பொருளாதாரத்தை உயர்த்துவது தொடர்பாகவும் அடிக்கடி பயணம் மேற்கொள்வார்.இம்முறை வித்தியாசமாக இயற்கையை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு மிகவும் சாகசம் நிறைந்த பயணத்தில் பங்கேற்றார்.ஆம்.. man vs wild நிகழ்ச்சியில் பியர் கிரில்ஸுடன் இணைந்து ஜிம் கார்பட் நேஷனல் பார்க் என்ற இடத்திற்கு பயணம் மேற்கொண்டார்.
பிரதமர் மோடியுடன் பயணித்த அனுபவம் குறித்து பியர் கிரில்ஸ் ANI செய்திக்கு பேட்டி அளிக்கையில், பிரதமர் மோடி போன்ற ஒரு உலகளாவிய தலைவரை ஒரு சாகச பயணத்திற்கு அழைத்து செல்வது என்னுடைய பாக்கியம்.சில ஆண்டுகளுக்கு முன்பு, முன்னாள் அமெரிக்க அதிபரான ஒபாமாவை அழைத்து சென்றதும் எனக்கு ஒரு பாக்கியமே.ஆனால் இருவரின் பயணமும் நாம் இயற்கையை பாதுகாக்க வேண்டும் என்பதையே உணர்த்துகிறது.இந்தியா ஒரு அழகான நாடு ஆனால் நீங்கள் அதை பாதுகாக்க வேண்டும்.பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்து சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும். மேலும் பிரதமர் மோடியுடனான man vs wild நிகழ்ச்சியின் படப்பிடிப்பில் இருந்த எங்கள் குழு மிகவும் பயத்தில் இருந்தார்கள்.ஆனால் நாங்கள் என்ன செய்தாலும் மோடி அவர்கள் அமைதியாக இருந்தார்.இந்த பயணத்தின் மூலம் அவரின் பணிவு தன்மையை புரிந்துக்கொண்டேன்.
இந்நிலையில் இவர்கள் பயணம் செய்த man vs wild நிகழ்ச்சியானது வரும் 12 ஆம் தேதி டிஸ்கவரி சேனலில் ஒளிப்பரப்பாக உள்ளது.