திருச்சியில் உள்ள தனியார் போதை மறுவாழ்வு மையத்தில் விதிமுறைகள் கடைபிடிக்கவில்லை என்று திருச்சி அரசு மருத்துவமனை மன நல மருத்துவ பிரிவு தலைவர் கூறியுள்ளார்.
திருச்சி கே.கே. நகரில் உள்ள தனியார் போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றவர்கள் உயிரிழந்த விவகாரத்தை அடுத்து, திருச்சி அரசு மருத்துவ கல்லூரி மனநல துறை தலைவர் மருத்துவர் நிரஞ்சனா தலைமையில் ஆய்வு நடத்தப்பட்டது. பின்னர் செய்தியாளரிடம் பேசிய அவர், போதுமான கழிவறை, குடிநீர், படுக்கை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமலும், பத்தாம் வகுப்பு படித்த ஒருவர்தான் சிகிச்சை பெற்றவர்களை கையாண்டிருப்பதாகவும் கூறினார். மையத்திற்கு உரிய அங்கீகாரம் என்று எதையும் காட்டவில்லை என்றும், இது குறித்து விரிவான அறிக்கையை சென்னை மனநல காப்பக இயக்குநர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க உள்ளதாகவும் மருத்துவர் நிரஞ்சனா தெரிவித்தார்.