அவனியாபுரம் கால்நடை மருத்துவமனையில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கான உடல் தகுதி சான்று கடந்த 3-ம் தேதி தொடங்கி இன்று வரை வழங்கப்பட்டது. கால்நடை மருத்துவமனைக்கு காளைகள் அழைத்து வரப்பட்டு பரிசோதிக்கப்பட்டு அங்க, அடையாளங்கள் குறிக்கப்பட்டன. உரிமையாளர்கள் உடன் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ஒட்டப்பட்ட உடற்தகுதி சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்தநிலையில், ஜல்லிக்கட்டு நடைபெறும் போது புகைப்படத்துடன் கூடிய தகுதி சான்று பெற்ற காளைகள் மட்டுமே போட்டியில் இடம் பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவனியாபுரத்தில் உள்ள கால்நடை மருத்துவமனையில் இன்று வரை 283 காளைகள் பரிசோதனை செய்யப்பட்டு 7 காளைகள் நிராகரிக்கப்பட்டு 276 காளைகளுக்கு தகுதிச் சான்றிதழ் வழங்கப்படும்.