எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியதையடுத்து, சேலம் இரும்பாலையில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கொரோனா சிகிச்சை மையம் செயலபடத் தொடங்கியது.
சேலம் இரும்பாலையில் ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய 500 படுக்கைகள் கொண்ட தற்காலிக கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு பெருகி வந்தபோதும், சிகிச்சை மையம் செயல்பாட்டுக்கு வராதது குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார். இதையடுத்து அவசர அவசரமாக சிகிச்சை மையம் செயல்படத் தொடங்கியது. இதனிடையே அங்கு சில கட்டுமானப் பணிகளைத் தொடங்கி வைக்க, மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி வருகை தந்தார். இதனால் சிகிச்சை மையத்துக்கு நோயாளிகளை ஏற்றி வந்த ஆம்புலன்ஸ் 2 மணி நேரமாகக் காத்திருந்து அமைச்சரின் வருகைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டதால் நோயாளிகள் பெரும் அவதியடைந்தனர்.