சூர்யா நடித்துள்ள என்.ஜி.கே திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு

எதிர்பார்ப்புக்கு மத்தியில் சூர்யா நடித்துள்ள என்.ஜி.கே திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் மற்றும் பலர் நடித்துள்ள திரைப்படம் நந்த கோபாலன் குமரன். சுருக்கமாக என்.ஜி.கே என்று சொல்லப்படும் இந்த திரைப்படம் அரசியல் ஆக் ஷன் திரைப்படமாக தயாராகியுள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. இராணுவ வீரரின் மகனாக இருக்கும் சூர்யாவுக்கு இந்த நாட்டின் மீது இருக்கும் அக்கறை, எப்படி அவரை அரசியல் களம் காணச் செய்கிறது என்பதுதான் படத்தின் கதையாக இருக்குமென்று தெரிகிறது.

Exit mobile version