கோபிசெட்டிபாளையம் அருகே நண்பர்களுடன் பிறந்த நாள் கொண்டாட வந்தபோது வாய்க்காலில் தவறி விழுந்த இருவர் நீரில் மூழ்கி பலியாகினர்.
ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் கல்லூரி நண்பர்களான மைதிலி, முத்துக்குமரேசன், பகவதிராஜா, அரிபிரசாத், ஜவகர், சங்கீதா, பவித்ரா, அனிதா என 8பேரும் ஜவகரின் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாட தடப்பள்ளி வாய்க்கால் கரைக்கு வந்தனர். கேக் வெட்டி கொண்டாடிக் கொண்டிருந்தபோது பகவதிராஜா மற்றும் முத்துக்குமரேசன் இருவரும் வாய்க்காலில் தவறி விழுந்தனர். அவர்களை காப்பாற்ற அரிபிரசாத் என்பவர் நீரில் குதித்து காப்பாற்ற முயன்றார். இருவரையும் காப்பாற்ற முடியாத நிலையில் அரிபிரசாத்தும் நீரில் மூழ்கியுள்ளார். இதைப்பார்த்த நண்பர்கள் கூச்சல் போடவே அக்கம் பக்கம் உள்ளவர்கள் வாய்க்காலில் குதித்து மூவரையும் காப்பாற்ற முயன்றுள்ளனர். அதில் அரிபிரசாத் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டார். மற்றும் இருவரும் நீரில் மூழ்கி இறந்தனர்.