ஜார்ஜியா நாட்டின் செயிண்ட் சைமன் தீவில் கரை ஒதுங்கிய திமிலங்களை சுற்றுலாப் பயணிகள் மீண்டும் கடலுக்குள் அனுப்பும் காட்சிகள் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
பாலூட்டி வகையைச் சேர்ந்த இந்த திமிங்கலங்கள் ஆழமான கடல் பகுதிகளில் மட்டுமே வாழும் தன்மையுடையது. இவை பாதை மாறி கரை ஒதுங்கியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. மேலும் திமிங்கலங்கள் கரை ஒதுங்கியதைக் கண்ட சுற்றுலாப் பயணிகள் சற்றும் தாமதிக்காமல், அவற்றை கடலுக்குள் அனுப்பியதால் பெரும்பாலான திமிங்கலங்கள் உயிர் பிழைத்தன என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. தாமாகவே முன்வந்து திமிங்கலங்களை கடலுக்குள் அனுப்பிய சுற்றுலாப் பயணிகளுக்கு சமூக ஆர்வலர்கள் தங்கள் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.