டெல்லி அரசின் நடவடிக்கைக்கு இசை கலைஞர் டி.எம் கிருஷ்ணா எதிர்ப்பு

தமிழக இசை கலைஞர் டி.எம் கிருஷ்ணாவின் இசை நிகழ்ச்சியை கடைசி நேரத்தில் டெல்லி அரசு ரத்து செய்ததற்கு அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், டெல்லி அரசின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாடுவதற்கு, அம்மாநில அரசே அழைத்ததாகவும், சில ஊடங்களில் தம்மை பற்றி வெளியான தவறான தகவல்களால், தனது நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். டெல்லி அரசின் நடவடிக்கை தமக்கு வருத்தம் அளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் டெல்லி மக்களின் ஆதரவு முழுவதுமாக தமக்கு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

 

Exit mobile version