தூத்துக்குடி பண்ணை பசுமை நுகர்வோர் அங்காடி, அதிக அளவிலான காய்கறிகளை விற்பனை செய்வதில் 5 ஆண்டுகளாக மாநில அளவில் முதல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
காய்கறிகளின் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தவும், பொதுமக்களுக்கு குறைந்த விலையில் தரமான காய்கறிகளை வழங்கவும், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவால், பண்ணை பசுமை அங்காடிகள் திறந்து வைக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து தூத்துக்குடியில் புதிய பேருந்து நிலையம் அருகே கடந்த 2014-ஆம் ஆண்டு பண்ணை பசுமை நுகர்வோர் அங்காடி தொடங்கப்பட்டது. இங்கு விவசாயிகளிடமிருந்து அரசு நேரடியாக கொள்முதல் செய்வதால், காய்கறிகள் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன. இந்த கடை தொடங்கப்பட்டு இன்று வரை தொடர்ந்து 5 ஆண்டுகளில் 8 ஆயிரத்து 300 டன் காய்கறிகளை 26 கோடிக்கு மேல் விற்பனை செய்து தொடர்ந்து மாநில அளவில் முதல் இடம் பிடித்து சாதனை படைத்து வருகிறது. 6-வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்கு இலவச மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.