உருமாறிய கொரோனா தொற்றால், மூன்றாவது அலை உருவானால், அக்டோபர், நவம்பரில் பாதிப்பு உச்சத்திற்கு செல்ல வாய்ப்புள்ளதாக மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
மத்திய அரசின் வல்லுநர் குழுவில் இடம்பெற்றுள்ள மணீந்திர அகர்வால், ஒரு கணிப்பை வெளியிட்டுள்ளார்.
அதில், கொரோனா தடுப்பு விதிகளை முறையாக பின்பற்றாவிட்டால், மூன்றாம் அலை உருவாக வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதையவிட 25 சதவீதம் அதிகப் பரவும் வேகம் கொண்ட புதிய தொற்று, ஆகஸ்ட் மாதம் பரவத் தொடங்கினால், அக்டோபர், நவம்பரில் பாதிப்பு உச்ச நிலையை எட்டும் என்றும், இரண்டாம் அலையின் உச்சத்தைவிட பாதியாக இருக்கும் என்றும் மணீந்திர அகர்வால் குறிப்பிட்டுள்ளார்.
மூன்றாவது அலையின்போது, மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் என்று மற்றொரு வல்லுநரான வித்யாசாகர் தெரிவித்துள்ளார்.