தியாகராஜர் சுவாமி கோயில் இரண்டாம் கட்ட சோதனை -145 சிலைகள் ஆய்வு

திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோயிலில் நடைபெற்ற இரண்டாம் கட்ட சோதனையில் இதுவரை 145 சிலைகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற தியாகராஜர் சுவாமி கோயிலில் சிலைகளின் தொன்மை குறித்து அறியும் இரண்டாம் கட்ட ஆய்வு நடைபெற்று வருகிறது. நேற்று தொடங்கிய இந்த ஆய்வில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மற்றும் தொல்லியல் துறையினர் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தின் 625 கோயில்களில் உள்ள 4,635 சிலைகளின் உண்மை தன்மை அறியும் விதமாக இந்த ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் நேற்று தொடங்கிய இரண்டாம் கட்ட ஆய்வின் முதல் நாளில் 145 சிலைகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் ஆய்வு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

 

Exit mobile version