குற்றாலநாதர் கோயிலில் விமரிசையாக நடந்த தேரோட்டம்

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற குற்றாலநாதர் கோயிலில், மார்கழி மாத திருவாதிரை திருவிழாவையொட்டி, தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

ஆண்டுதோறும் நடைபெறும் நடைபெறும் மார்கழி மாத திருவாதிரை திருவிழா கடந்த புதன்கிழமை அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 5ஆம் நாளான நேற்றுத் தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. விநாயகர், முருகர், நடராஜர், குற்றாலநாதர் சுவாமி மற்றும் அம்பாள் ஆகியோர் தனித்தனியே தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். 5 தேர்களையும் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சென்றனர்.

Exit mobile version