கனிமொழி வீட்டில் நடத்தப்பட்ட சோதனை பாரபட்சமற்றது- சத்யபிரதா சாஹூ

தேர்தல் ஆணையம் பாரபட்சமின்றி நடுநிலையுடன் செயல்பட்டு வருவதாக தெரிவித்துள்ள தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ, கனிமொழி வீட்டில் செய்யப்பட்ட சோதனை குறித்து விளக்கமளித்தார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ, நாளை காலை 6 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்று, காலை 7மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கும் என்றும், தேர்தல் பணிகளில் மூன்றரை லட்சம் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாகவும் கூறினார்.

கனிமொழி வீட்டில் நடத்தப்பட்ட சோதனை பாரபட்சமற்றது என்றும், புகார்களின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், சத்யபிரதா சாஹூ விளக்கம் அளித்தார்.

Exit mobile version