காஷ்மீர் தாக்குதலுக்கு ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்பு

காஷ்மீரில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் சென்ற வாகனங்கள் மீது நிகழ்த்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் வீரமரணமடைந்த வீரர்களின் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டம் அவந்திபோராவில் 70 வாகனங்களில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் 2 ஆயிரத்து 500 பேர் சென்று கொண்டு இருந்தனர். அப்போது பாதுகாப்பு படை வீரர்கள் சென்ற 2 பேருந்துகள் மீது பதுங்கி இருந்த தற்கொலை படை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 44 சிஆர்பிஎப் வீரர்கள் பலியாகினர்.

ஏராளமான வீரர்கள்  படுகாயம் அடைந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இதனிடையே தாக்குதல் நடத்திய தற்கொலைப்படை தீவிரவாதியின் புகைப்படம் வெளியாகியுள்ளது.  இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. 

இதனிடையே காஷ்மீரில் இன்று இணையதள சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. நேற்று நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலை தொடர்ந்து, 4 ஜி சேவை, 2 ஜி சேவையாக தரம் குறைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று முற்றிலுமாக இணையதள சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு காரணங்களுக்காக மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிகிறது. 

Exit mobile version