தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் மாதம் 2ம் தேதியுடன் முடிவடைவதை அடுத்து, தேர்தல் அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மாநிலங்களவை தேர்தல் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதன்படி, மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் வரும் மார்ச் 3ம் தேதி முதல் தொடங்குகிறது. வேட்பு மனுக்களை மார்ச் 13ம் தேதி வரை தாக்கல் செய்யலாம். வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை மார்ச் 16ம் தேதி அன்று நடைபெறுகிறது. வேட்பு மனுக்களை திரும்பப் பெற மார்ச் 18ம் தேதி கடைசி நாளாகும். இதனையடுத்து, மாநிலங்களவை தேர்தலுக்கான வாக்குபதிவு மார்ச் 26ம் தேதி அன்று நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை அன்றைய தினமே நடைபெறுகிறது. மேலும், தேர்தல் நடவடிக்கைகள் மார்ச் 30ம் தேதியுடன் நிறைவு பெற இருக்கிறது.