அமெரிக்கா – ஈரான் இடையே உருவாகி வரும் பதற்றமான சூழ்நிலை

இந்தியாவில், பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு இல்லை என மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா – ஈரான் இடையே பதற்றம் உருவாகி உள்ளதால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருகிறது. கச்சா எண்ணெயை பொறுத்தவரை இந்தியா 84 சதவீதம் இறக்குமதி செய்து வருகிறது. இந்நிலையில், அமெரிக்கா, ஈரான் பதற்றம் காரணமாக இந்தியாவில் கடந்த 6 நாட்களாக தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருகிறது. இதனால் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்பட உள்ளதாக தகவல் வெளியானது. இது தொடர்பாக விளக்கமளித்த மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், இந்தியாவில் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு இல்லை என்றும், எத்தகைய சூழ்நிலை ஏற்பட்டாலும் அதனை சமாளிக்க மத்திய அரசு தயார் நிலையில் உள்ளதாகவும் கூறியுள்ளார்.

Exit mobile version