தஞ்சாவூர் மாவட்டம் சக்கரவாகேஸ்வரர் ஆலய குளத்தை தமிழக அரசு உதவியுடன் பொதுமக்கள் மீட்டெடுத்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தை அடுத்த சக்கராப்பள்ளியில் சக்கரவாகேஸ்வரர் கோயில் இரண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பழைமையான ஆலயமாகும். கோயிலின் அருகே ஒரு ஏக்கர் பரப்பளவில் உள்ள தாமரைக்குளம் என்ற தீர்த்தக் குளம் முறையான பராமரிப்பு இல்லாததால் தூர்ந்து போனது. இந்த நிலையில் ஆக்கிரமிப்புகள் மற்றும் கருவேல மரங்கள் வளர்ந்துள்ள குளத்தை தூர் வார முடிவு செய்யப்பட்டு, கோவில் நிர்வாகம் சார்பில் நிதி ஒதுக்கப்பட்டு கோயில்குளம் தற்போது புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது.