அண்ணாமலையார் கோவிலுக்கு வரும் வெளிநாட்டு பக்தர்கள் தங்களுக்கு வைரஸ் தொற்று இல்லை என விமான நிலையத்தில் அளிக்கப்பட்ட கடிதத்தை காண்பித்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் வகையில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை கோவில் நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. குறிப்பாக, கோயிலில் உள்ள அனைத்து இடங்களிலும் நோய் பரவாமல் இருக்க தடுப்பு மருந்துகள் தெளிக்கப்பட்டு வருகின்றது. மேலும் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டும், அவர்களுக்கு வைரஸ் அறிகுறிகள் இருந்தால் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும், இதற்காக கோயில் நுழைவு வாயிலில் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. கோவிலுக்கு வரும் வெளிநாட்டு பக்தர்கள் தங்களுக்கு வைரஸ் தொற்று இல்லை என விமான நிலையத்தில் அளிக்கப்பட்ட கடிதத்தை காண்பித்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.