அரவக்குறிச்சியில் துணை மின்நிலையம் அமைக்கும் பணிகள் மும்முரம்

அரவக்குறிச்சியில் மின்சார வாரியம் சார்பில் புதிய துணை மின் நிலையம் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி பேரூராட்சி பகுதிக்கு, தற்சமயம் பள்ளபட்டி துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மின்சார பற்றாக்குறையால், தற்போது அரவக்குறிச்சி நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மிக குறைந்த மின் அழுத்தத்துடன் கூடிய மின்சாரத்தையே விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பாக, அரவக்குறிச்சியில் 5கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய துணைமின் நிலையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

நகர் பகுதிகளில் 16 கிலோவாட், 25 கிலோவாட், 63 கிலோவாட் திறன்கொண்ட புதிய ட்ரான்ஸ் பார்மர்கள் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆங்காங்கே நிறுவப்பட்டு வருகின்றன. இப்பணிகள் இன்னும் சில மாதங்களில் முடிவடையும் என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். துணை மின் நிலையம் அமைக்கப்படுவதற்கு பொதுமக்களும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Exit mobile version