பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று பாம்பன் பாலத்தில் புதிய மின் விளக்குகள் அமைக்கப்பட்டன. ராமேஸ்வரத்தில் உள்ள பாம்பம் தரைப்பாலம் தென்னிந்தியாவின் புகழ்பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. பாலத்தின் பல விளக்குகள் கடந்த சில நாட்களாக பழுது காரணமாக செயல்படாமல் இருந்து வந்தது. எனவே, புதிய மின் விளக்குகளை உடனடியாக அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
மக்களின் கோரிக்கையை ஏற்று பாம்பன் பாலத்தில் இருந்த பழுதடைந்த மின் விளக்குகளை அகற்றிவிட்டு புதிய விளக்குகள் பொருத்தப்பட்டன. அரசின் இந்த துரித நடவடிக்கைக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.