சட்டப்பேரவை வளாகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் பின்வருமாறு தன்னுடைய கருத்தினை தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் :
எதிர்க்கட்சிகள் பேசக்கூடிய கருத்துக்கள் கேள்விகள் மக்கள் பிரச்சனைகள் நேரலையில் ஒளிபரப்பப்படாமல் இருட்டடிப்பு செய்யப்படுகிறது. தமிழக சட்டப்பேரவை நடுநிலையாக செயல்படவில்லை சபாநாயகர் பாரபட்சமாக செயல்படுகிறார்.
இன்றைய தினம் சட்டப்பேரவையில் ஜீரோ அவரின் விருத்தாச்சலத்தில் நடைபெற்ற பாலியல் தொல்லை தொடர்பாக பேசினேன். பாலியல் குற்றச்சாட்டில் ஈடுபட்ட திமுக நபர் மீது இன்று காலை வரை வழக்கு பதிவு செய்யப்படவில்லை.குழந்தையின் நிலைகுறித்து விருத்தாச்சலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அரசு மருத்துவமனை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள விருத்தாச்சலத்தில் ஒன்றாம் வகுப்பு படிக்கின்ற பெண் குழந்தை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக விருதாச்சலம் அரசு மருத்துவமனையில் அந்த குழந்தை சேர்க்கப்பட்டது. நேற்று இரவு வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் ஆனால் தற்போது முதல்வர் அவர் கட்சியை விட்டு நீக்கி இருக்கிறோம் என தெரிவித்திருக்கிறார்
இன்று காலை 9 மணி வரை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு அந்தப் பள்ளியின் உரிமையாளரும் விருத்தாச்சலம் நகராட்சியின் 30 வது வார்டு திமுக கவுன்சிலருமான பக்கிரிசாமியை விருதாச்சலம் காவல் துறையினர் அழைத்துச் சென்றார்கள். அழைத்துச் சென்றும் அவர் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்யவில்லை.
திமுக ஆட்சிக்கு வந்த நாள் முதல் பாலியல் தொல்லைகள் அதிகரித்து வருகிறது பிஞ்சு குழந்தைகள் பாலியல் தொல்லைக்கு ஆளாக்க ப்படுகிறார்கள் எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு விருதாச்சலத்தில் நடைபெற்ற இந்த சம்பவம் கொடூரமான சம்பவம். பள்ளியின் உரிமையாளரே குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் இது திறமையற்ற அரசாங்கம் என்பது இதன் மூலம் தெரிகிறது. இந்த குழந்தைக்கு ஏற்பட்டிருக்கிற கொடுமையான சம்பவம் சட்டமன்றத்தில் பேசும்போது அதனை நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படவில்லை இதனால் எதிர்க்கட்சிகள் பேசக்கூடிய மக்கள் பிரச்சனைகள் மக்கள் அறிந்து கொள்ள முடியவில்லை என எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டினார். பாலியல் புகார் உள்ளானவர் திமுகவை சேர்ந்தவர் ஆளுங்கட்சியை சேர்ந்தவர் அவர் மீது நடவடிக்கை எடுக்க கால தாமதமானது இது கண்டிக்கத்தக்கது பெண் குழந்தைக்கு ஏற்பட்டுள்ள நிகழ்வுக்கு தற்போது கொந்தளிப்பு மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது
ஜீரோ ஹவரல் நான் பேசிய பேச்சுக்கள் லைவில் வரக்கூடாது என்பதை மெய்ப்பிக்கும் வகையில் லைவை முடக்கி உள்ளனர். சபாநாயகர் ஆளுங்கட்சியின் சிக்னலை பார்த்து செயல்படுவதாகவும் நடுநிலையாக செயல்படவில்லை எனவும் குற்றம் சாட்டினார். திமுக ஆட்சிக்கு வந்ததும் சட்டப்பேரவையில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளும் நேரலை செய்யப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் அமைச்சர்கள் பேசுவதை நேரடி ஒளிபரப்பு செய்வதை போல் எதிர்க்கட்சித் தலைவர் பேசுவதையும் நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் ஏன் அதை நிறைவேற்றவில்லை. கேள்வியை ஒளிபரப்பாமல் பதிலை மட்டும் ஒளிபரப்பினால் மக்களுக்கு எப்படி தெரியும். ஒவ்வொரு ஆட்சியிலும் எதிர்க்கட்சி தலைவராக இருப்பவர் வராத போது எதிர்க்கட்சி துணைத் தலைவராக இருப்பவர்தான் சட்டப்பேரவையில் செயல்படுவது வழக்கம். கட்சி விவகாரம் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு முடிந்த பின்னரும் எதிர் கட்சி துணைத் தலைவர் இருக்கை ஒதுக்காதது ஏன் என எதிர் கட்சித் தலைவர் கேள்வியெழுப்பினார்.
திமுக அரசு ஒரு சர்வாதிகார அரசாக செயல்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் கண்டனம். 18 சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்ட காங்கிரஸ் கட்சிக்கு துணைத் தலைவர் பதவி கொடுத்திருக்கப்பட்டுள்ளது. 60-க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட அதிமுகவுக்கு துணைத் தலைவர் இருக்கை ஏன் வழங்கவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் கேள்வியெழுப்பினார்.
கடலூர் மாவட்டம் விருதாச்சலம் குழந்தை பாலியல் துன்புறுத்தல் ஆலா கப் பட்டது குறித்து நேற்று இரவே பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளனர். சம்பவம் நடந்து 13 மணி நேரம் ஆன பிறகு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது 13 மணி நேரம் அந்தப் பகுதியில் காவல்துறை இல்லையா காவல்துறை செயல்படவில்லையா என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிச்சாமி கேள்வியெழுப்பினார்.
அதிமுக ஆட்சியில் 110 விதி என் கீழ் 5 லட்சம் பேருக்கு முதியோர் ஓய்வூதியம் வழங்கப்படும் என தெரிவித்து அதில் 90% சதவீதம் பேருக்கு கொடுத்தோம். ஆனால் தற்போது திமுக ஆட்சியில் 7 லட்சம் பேருக்கு முதியோர் உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் உதவித்தொகை நிறுத்தப்பட்டவை குறித்து ஆய்வு நடத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
Discussion about this post