தண்ணீரைத் தேடி நாங்கள் செல்லவில்லை, தண்ணீர் எங்களை தேடி வருகிறது என்று சென்னை மயிலாப்பூர் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னை நகரம் முழுவதும் பல்லேறு பகுதிகளில் குடிநீர் வாரியம் வழியாக உள்ளாட்சி நிர்வாகம் தண்ணீர் வழங்கி வருகிறது. இந்நிலையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதாக எதிர்க்கட்சியினர் வதந்தி பரப்பி வருகின்றனர். தண்ணீர் தட்டுப்பாடு குறித்து மயிலாப்பூர் பகுதியில் உள்ள நடுக்குப்பத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கூறும் போது, தினமும் மூன்று வேளையும் அலுவலகம் செல்பவர்கள், செல்லாதவர்கள் என்று அனைத்து தரப்பு மக்களுக்கும் தண்ணீர் கிடைக்க குடிநீர் வாரியம் சிறப்பாக பணியாற்றி வருவதாக கூறுகின்றனர். பருவ மழை பொய்த்துப் போனதால் ஏற்பட்டுள்ள தண்ணீர் தட்டுப்பாட்டினை போக்க தமிழக அரசு சிறப்பாக நடவடிக்கை வருவதாக அவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.