தமிழ்நாட்டில் கொரோனாவால் தினசரி உயரிழப்போரின் எண்ணிக்கை 400-க்கும் மேல் பதிவாகி வருகிறது. நாள்தோறும் அரசு மருத்துவமனைகளில் 250க்கும் அதிகமானோரும், தனியார் மருத்துவமனைகளில் 150க்கும் மேற்பட்டோரும் உயிரிழப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்து வருகிறது. கொரோனா காரணமாக உயிரிழப்போர் தொடர்பான விவரங்களை வெளியிடுவதில் அரசு குளறுபடி செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஜூன் 5ம் தேதி 443 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர்களில், 77 பேர் மே மாதம் உயிரிழந்தவர்கள் என்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதில் 47 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 30பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. குறிப்பாக, மே 20ம் தேதிக்கு முன்னதாக உயிரிழந்த 18 பேரின் விவரங்கள் நேற்றைய அறிக்கையில், தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள குளறுபடியின் உச்சம். இதேபோன்று 4ம் தேதி வெளியிடப்பட்ட அறிக்கையில், மே மாதம் உயிரிழந்த 86 பேரின் விவரங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. கொரோனா பலியை கட்டுப்படுத்த சிறிதும் கவனம் செலுத்தாத தமிழ்நாடு அரசு, இறந்தவர்களின் விவரங்களை வெளிப்படைத் தன்மையுடன் வெளியிடவேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது.