நீட் மசோதா விவகாரத்தில் தமிழக அரசு எதையும் மறைக்கவில்லை

நீட் தேர்வு விலக்கு மசோதா விவகாரத்தில் தமிழக அரசு எதையும் மறைக்கவில்லை என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் விளக்கம் அளித்துள்ளார். மசோதா திருப்பி அனுப்பியதற்கான காரணங்களை கேட்டு மத்திய அரசுக்கு 12 முறை கடிதம் அனுப்பி உள்ளதாக தெரிவித்த அமைச்சர், காரணங்களை மத்திய அரசு தெரிவிக்கவில்லை என்றால் வழக்கு தொடரலாம் என்றார்.

நீட் மசோதா விவகாரத்தில் அவசியம் ஏற்பட்டால் சட்டமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்டலாம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேரவையில் தெரிவித்தார்.

Exit mobile version