ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரிய வழக்கில் தமிழக அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல்

ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதி கோரி ஸ்டெர்லைட் நிர்வாகம் தாக்கல் செய்த இடைக்கால மனு, உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வரவுள்ள நிலையில், தமிழக அரசு அணைத்து கட்சி கூட்டத்தில் எடுத்த முடிவுகளை பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்துள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதி கோரும் வேதாந்தா நிறுவனத்தின் இடைக்கால மனு மீது விசாரணை நடைபெற்று வருகிறது.

ஏற்கெனவே நடைபெற்ற விசாரணையின்போது, ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், ஆக்சிஜன் உற்பத்திகாக ஸ்டெர்லைட் ஆலையை திறந்து அரசே ஏன் நடத்தக்கூடாது என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக் கூடத்தை தமிழக அரசு இயக்க அனுமதிக்கக் கூடாது எனவும், ஆலை நிர்வாகமே ஏற்று நடத்த தயாராக உள்ளதாகவும், வேதாந்தா நிறுவனம் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது.

இதனிடையே, ஆக்சிஜன் உற்பத்திக்காக 4 மாதங்களுக்கு ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் பிரமானப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

அதில் ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனில் தமிழக தேவைக்கு முன்னுரிமை வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

இந்தநிலையில், ஆக்சிஜன் உற்பத்திக்காக ஆலையை திறக்க வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த இடைக்கால மனு உச்சநீதிமன்றத்தில் இன்று  மீண்டும் வருகிறது.

Exit mobile version