தமிழக அரசின் நிதியுதவியில் இயங்கும் உண்டு உறைவிடப்பள்ளி

திண்டுக்கல் அருகே உள்ள தமிழக அரசின் நிதியுதவியில் இயங்கி வரும் ஆதரவற்ற குழந்தைகளுக்கான உண்டு உறைவிடப்பள்ளி மாணவர்கள் தமிழக அரசின் செயல்பாட்டிற்கு நன்றி தெரிவித்தனர். திண்டுக்கல் மாவட்டம் வேடசெந்தூர் அடுத்த அரியபித்தன்பட்டியில் இயங்கி வரும், உண்டு உறைவிட சிறப்பு பயிற்சி மையத்தை, ஆதரவற்ற குழந்தைகளின் கல்விக்காக தமிழக அரசு கொண்டு வந்தது. இங்கு உள்ள மாணவர்களுக்கு, உணவு உடை இருப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறையின் மூலம் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

இங்கு, எட்டாம் வகுப்பு வரை உள்ள நிலையில், இங்கு படிப்பை முடிக்கும் மாணவர்களை, அரசே வேறு பள்ளிகளில் கல்வியை தொடர உதவி செய்கிறது. அவ்வாறு படிக்கும் மாணவர்கள், இந்த உண்டு உறைவிட சிறப்பு பயிற்சி மையத்திலேயே தங்கிக்கொள்ளலாம். இந்த நிலையில், இங்கு பயிலும் மாணவர்கள், தங்களின் கல்விக்கும் வாழ்க்கை தரம் மேம்படவும் பல்வேறு உதவிகளை செய்து வரும் தமிழக அரசுக்கு மாணவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

Exit mobile version