யாஸ் புயல் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்துக்கு பேரிழப்பு இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்தும், தமிழக அரசு நடவடிக்கைகள் எடுக்காததே பாதிப்புகளுக்கு காரணம் என வானியல் நிபுணர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
யாஸ் புயல் ஒடிஷா அருகே, நேற்று கரையை கடந்த நிலையில், தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் பலத்த காற்று வீசியது. குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் விளை பயிர்கள் நீரில் மூழ்கின. ஏராளமான வாழை மரங்கள் வேரோடு சாய்ந்தன. இந்த நிலையில் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்காததே பேரிழப்புக்கு காரணம் என இயற்கை நீர்வள பாரதுகாப்பு இயக்க தலைவர் கே.பி.ராமலிங்கம் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், நாகர்கோவில் நகர் பகுதிகளில் அதிக மழை நீர் தேங்கியதால், மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.