தமிழக சட்டபேரவை கூட்டத்தொடர் ஜூன் இரண்டாம் வாரத்தில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தக் கூட்டத் தொடரில் பல்வேறு அரசுத் துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற உள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 8 ம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. பிப்ரவரி 14ஆம் தேதியுடன் தமிழக சட்டபேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் தளர்த்தப்பட்டுள்ளதால் சட்டப்பேரவை கூட்டத் தொடருக்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
இந்தநிலையில் இந்த ஆண்டிற்கான மானிய கோரிக்கை ஜூன் மாதம் இரண்டாம் வாரத்தில் துவங்கியிருப்பதாக சட்டப்பேரவை செயலகம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த மானிய கோரிக்கையில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மானியக் கோரிக்கை தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாக காலமான சூலூர் சட்டமன்ற உறுப்பினர் கனகராஜிற்கு இரங்கல் தெரிவித்து முதல் நாள் கூட்டம் ஒத்திவைக்கப்படவுள்ளது.