20 வருடங்களாக உறவினரை தேடி அலையும் ஸ்வீடன் நாட்டை சேர்ந்த தமிழ் பெண்

45ஆண்டுகளாக தன் சொந்தங்களை தேடி அலையும் சுவீடன் நாட்டை சேர்ந்த தமிழகப் பெண் பற்றிய ஒரு செய்தித்தொகுப்பை தற்போது காணலாம்.

மனித சமுதாயம் என்றும், தன்னுடைய தோன்றல் வரலாறு, மொழி, அவற்றிற்கான பூர்வீகத்தை பற்றிய ஆய்வில் ஆர்வம் காட்டி வந்துகொண்டே இருக்கும். அப்படி, தன்னுடைய சொந்தங்களையும் உறவுகளையும் தேடி, சுவீடன் நாட்டை சேர்ந்த இந்திய தமிழ் பெண் ஒருவர், கடந்த 20ஆண்டுகளுக்கும் மேலாக, பல முறை இந்தியா மற்றும் தமிழகம் வந்திருப்பது, பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 1973ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் பிறந்த மரியா கிரிஸ்டீனா என்பவர், 14 மாத குழந்தையாக இருந்தபோது எந்த சட்ட நடைமுறையையும் பின்பற்றாமல் சுவீடன் நாட்டு தம்பதியினருக்கு தத்துக்கொடுக்கப்பட்டார். முற்றிலும் வெளிநாட்டுச் சூழலில் வளர்ந்த மரியா கிரிஸ்டீனா, சுவீடன் நாட்டு நிற வெறியால் பெரிதும் பாதிக்கப்பட்டு, பல்வேறு சமூக புறக்கணிப்பிற்கு ஆளாகியுள்ளார்.

தன்னுடைய வளர்ப்பு பெற்றோருக்கு, இது பற்றி எதையும் புரியவைக்க முடியாமல், தான் சுவீடனை சேர்ந்தவரா அல்லது இந்தியரா என்ற குழப்பத்திற்கு ஆளாகி, தன்னுடைய உறவுகளை கண்டறிய வேண்டும் என்று முடிவு செய்தார். இதனையடுத்து, மரியா கிரிஸ்டினா கடந்த 20 ஆண்டுகளாக பலமுறை இந்தியா வந்துள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்து தகவல்கள் திரட்டியபோது, தன்னை வளர்த்த ஆதரவற்றோர் இல்லத்தின் மூலம், தன்னுடைய தாயார் பெயர் ஜெயமேரி என்றும் தந்தை மாதவன் என்றும் கண்டறிந்தார். ஆனால், அவர்கள் தற்போது உயிருடன் இல்லை என்ற சோகம் அவரை தாக்கினாலும், தனக்கு ஒரு அண்ணன் உள்ளான் என்ற தகவல் அவருக்கு கிடைக்கப் பெற்றுள்ளது.

அண்ணன் பற்றிய தகவல்கள் கிடைக்கப்பெறவே, அந்த உற்சாகத்தில், தற்போது அண்ணனை தேடும் முயற்சியில் இறங்கியுள்ளார் இந்த சுவீடன் நாட்டு தமிழ் பெண்.

Exit mobile version