ஆப்கனில் உள்ள பாஞ்ஷிர் மாகாண தலைநகருக்குள் நுழைந்துவிட்டதாக தாலிபன்கள் அறிவித்துள்ளனர்.
ஆப்கனில் மொத்தமுள்ள 34 மாகாணங்களில் 33 மாகாணங்களை தாலிபன்கள் கைப்பற்றினர். பாஞ்ஷிர் மாகாணம் மட்டும் கிளர்ச்சி படையினரின் ஆதிக்கத்தால், தாலிபன்கள் கைப்பற்ற முடியாமல் போனது. இந்த நிலையில் கிளர்ச்சி படையிருடன் தாலிபான்கள் கடும் சண்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், 600க்கும் மேற்பட்ட தாலிபன்கள் கொல்லப்பட்டதாகவும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட தாலிபன்கள் சிறைபிடிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், பாஞ்ஷிர் மாகாண தலைநகருக்குள் நுழைந்துவிட்டதாக தாலிபன்கள் அறிவித்துள்ளனர். கிளர்ச்சி படையை எதிர்த்து தொடர்ந்து முன்னேறி வருவதாக கூறிய தாலிபன்கள், விரைவில் அங்கு தாலிபன்களின் ஆதிக்கம் நிலைநிறுத்தப்படும் எனக் கூறியுள்ளனர்.