துணைவேந்தர் தலைமையில் நடைபெற்றது சிண்டிகேட் கூட்டம்

பாடத்திட்டம் மற்றும் மறு மதிப்பீடு முறையில் கொண்டு வரப்பட்டுள்ள மாற்றங்களுக்கு ஒப்புதல் பெறுவதற்கான சிண்டிகேட் கூட்டம் நடைபெற்றது. அண்ணா பல்கலைக்கழகத்தின் முக்கிய வளாக கல்லூரிகளான அண்ணா பல்கலைக்கழகம், கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா டெக்னாலஜி, எம்.ஐ.டி ஆகிய 4 கல்லூரிகளில் உள்ள பொறியியல் பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இவை, முதற்கட்டமாக அண்ணா பல்கலைக்கழகத்தின் 4 வளாக கல்லூரிகளில் மட்டும் 2019 மற்றும் 2020-ம் கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இதே 4 கல்லூரிகளில் விடைத்தாள் மறு மதிப்பீடு முறையில், மாணவர்கள் முன்பு மறு மதிப்பீடு, மறுகூட்டல் செய்ய அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்திருந்தது. இந்த நிலையில், பாடத்திட்டம் மற்றும் மறு மதிப்பீடு முறையில் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றங்களுக்கு ஒப்புதல் பெறுவதற்கான சிண்டிகேட் கூட்டம் பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.கே.சுரப்பா தலைமையில் நடைபெற்றது.

Exit mobile version