உச்சநீதிமன்றத்தின் கிளையை மதுரையில் அமைக்க வேண்டும் -எம்.பி ரவீந்திரநாத் குமார்

உச்சநீதிமன்றத்தின் கிளையை மதுரையில் அமைக்க வேண்டும் என்று தேனி அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் மக்களவையில் கோரிக்கை விடுத்துள்ளார்.

மக்களவையில் பேசிய தேனி அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் குமார், இந்தியாவில் 133 கோடி மக்கள் இருப்பதால் அவர்களுக்கு ஏற்படும் இன்னல்களை போக்க உச்சநீதிமன்றத்தில் 34 நீதிபதிகள் மட்டுமே இருப்பதாக தெரிவித்தார். பொதுமக்களுக்கு துரிதமாக நீதி கிடைக்க உச்ச நீதிமன்றத்தில் கூடுதலாக நீதிபதிகள் நியமனம் செய்ய வேண்டும் என்று மத்திய சட்டத்துறை அமைச்சரிடம் அவர் வேண்டுகோள் விடுத்தார். மக்களுக்கு விரைந்து நீதி வழங்கும் வகையில், மாநிலங்களில் உச்சநீதிமன்றத்தின் கிளைகள் ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். உச்சநீதிமன்ற கிளைகள் அமைக்க சட்டம் உள்ளதால், தமிழகத்தில் உச்சநீதிமன்றத்தின் கிளையை மதுரையில் அமைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மேலும், மதுரையிலிருது வணிக ரீதியிலான விமானங்களை இயக்க வேண்டும் என்று மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சரிடம் அவர் கோர்ரிக்கை விடுத்தார்.

Exit mobile version