போக்சோ வழக்குகளை விசாரிப்பதற்காக புதிய நீதிமன்றங்கள் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

நாடு முழுவதும் நிலுவையில் போக்சோ வழக்குகளை விரைந்து விசாரிப்பதற்காக சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் வழக்குகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகளை விரைந்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்க உத்தரவிட்டுள்ளது.

100 வழக்குகள் நிலுவையில் உள்ள மாவட்டத்திற்கு, ஒரு நீதிமன்றம் என்ற வகையில் 60 நாட்களுக்குள் சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கான அனைத்து செலவுகளையும் மத்திய அரசே ஏற்று கொள்ள வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Exit mobile version