சூரியனை புதன் கோள் கடக்கும் அரிய வானியல் நிகழ்வு இன்று நடக்க இருக்கிறது. அதன் தொகுப்பு
சூரியனை ஒவ்வொரு 88 நாட்களுக்கு ஒரு முறை புதன் கிரகம் சுற்றி வருகிறது ஆனால் சூரியன், புதன், பூமி ஆகிய கோள்கள் ஒரே நேர்க்கோட்டில் பயணிக்கும் போது மட்டுமே புதன் கிரகம் கடந்து செல்வதை நம்மால் காண முடியும். அந்த வகையில் இன்று நடக்கும் இந்த வானியல் நிகழ்வானது ஒரு நூற்றாண்டில் 8 முறைகள் மட்டுமே நடக்கும் அரிய நிகழ்வு ஆகும்.
புதன்கோள் சூரியனின் முன் நகரும்போது புதன் கோளின் விட்டம் சூரியனை விடவும் சிறியதாக இருப்பதால் இந்த நிகழ்வானது கரும்புள்ளியாக மட்டுமே காட்சியளிக்கும். இதை வெறும் கண்ணில் பார்க்கக் கூடாது. தொலைநோக்கி மூலம் மட்டுமே பார்க்க வேண்டும். அமெரிக்காவின் சில பகுதிகள் மற்றும் கனாடாவின் சில பகுதியிலும் இதனை முழுமையாக காணமுடியும்.
கடந்த 1999-ம் ஆண்டு நவம்பர் 15-ந்தேதி, 2003-ம் ஆண்டு மே மாதம் 7-ந்தேதி, 2006-ம் ஆண்டு நவம்பர் மாதம் 8-ந்தேதி, 2016 மே மாதம் 9 ஆம்தேதி ஆகிய நாட்களில் இந்த அரிய நிகழ்வைக் காண முடிந்தது. இப்போது மீண்டும் இதனைக்
காணும் வாய்ப்பு நமக்குக் கிடைத்துள்ளது. இதன் பின்னர் அடுத்துவரும் 2032ஆம் ஆண்டு நவம்பர் 13ஆம் தேதிதான் புதன்கோள் சூரியனை கடக்கும் அரிய நிகழ்வை நம்மால் பார்க்க இயலும்.