16 வது யாங் டி-பெர்டுவான் அகோங் ஆக சுல்தான் பதவியேற்பு

மலேசியாவின் மத்திய பஹாங் மாநிலத்தைச் சேர்ந்தவர் சுல்தான் அப்துல்லா ரியாதுதீன் அல்-முஸ்தபா பில்லா ஷா, கோலாலம்பூரில் உள்ள தேசிய அரண்மனையில் நடைபெற்ற பாரம்பரிய மலாய் விழாவில் யாங் டி-பெர்டுவான் அகோங்காக அதிகாரப்பூர்வமாக 16 வது அரசராக தேர்வு செய்யப்பட்டார். பாராளுமன்ற ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பு முடியாட்சியைக் கடைப்பிடிக்கும் மலேசியாவில் உள்ள தேசிய அமைப்பில் யாங் டி-பெர்டுவான் அகோங் என்பது மிகவும் முக்கியமானதாகும். பதவியேற்று கொண்ட பின் பேசிய அவர், “வறுமை மரபின் சுழற்சியை உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டும் என்று கூறினார், தென்கிழக்கு ஆசிய தேசத்தில் வறுமையை எதிர்த்துப் போராடும் மலேசிய அரசாங்கத்தின் திட்டங்களை பாராட்டினார்.இதில் கோலாலம்பூரில் உள்ள மலேசியாவின் தேசிய அரண்மனையின் சிம்மாசன அறையில் நடைபெற்ற இந்த விழாவில் புருனே சுல்தான் ஹசனல் போல்கியா உட்பட 700 விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.

Exit mobile version